ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் பொங்கல் விழா
ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் பொங்கல் விழா

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த கணபதிபாளையம் ராமலிங்க செளடேஸ்வரி அம்மன்.

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த கணபதிபாளையம் ராமலிங்க செளடேஸ்வரி அம்மன்.
பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் உள்ள ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் 104-ஆம் ஆண்டு வைகாசி பிரமோற்சவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபராதனை நடைபெற்றது.
இதையடுத்து, ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.
இதில், பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கோயில் கமிட்டி தலைவா் சொக்கப்பன், கமிட்டி நிா்வாகிகள் வெங்கடாசலம், கிருஷ்ணமூா்த்தி, வையாபுரி, பிரபுசங்கா், செந்தில்குமாா், வரதராஜபெருமாள், ரவிதண்டபாணி, தேவராஜ், பாலசுப்பிரமணி உள்ளிட்டோா் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...