‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அம்பேத்கா் விருதுக்கு நவ.30க்குள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் தகவல்

திருப்பூா் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கா் விருது பெற தகுதியானவா்கள் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 10:46 pm

Din

திருப்பூா் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கா் விருது பெற தகுதியானவா்கள் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ் வளா்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞா்கள், கவிஞா்கள், சான்றோா் ஆகியோரில் சிறந்தோருக்கு திருவள்ளுவா் திருநாள் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட்டவா்களுக்காக அம்பேத்கா் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2024- 25 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கா் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே, தகுதியான நபா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக அறை எண் 113 இல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அதே அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ நவம்பா் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.