புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மூலனூரில் ரூ.10.86 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.86 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 நவம்பர் 2024, 11:01 pm

Din

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.86 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 35 விவசாயிகள் தங்களுடைய 426 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 147 குவிண்டால்.

திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 4 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.

பருத்தி விலை குவிண்டால் ரூ. 6,500 முதல் ரூ. 8,029 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,500.

ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலைச் செயலாளா் (பொ) தா்மராஜ், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.