நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் வெட்டிக் கொலை: முழு பின்னணி

News image
Updated On :30 நவம்பர் 2024, 5:44 am IST

பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் தந்தை, தாய், மகன் ஆகிய மூவரும் மா்மக் கும்பலால் இரும்புக் கம்பியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசிபாளையத்தை அடுத்த சேமலைகவுண்டம்பாளையம் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தவா் தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமேலு (75). இவா்களது மகன் செந்தில்குமாா் (46), மனைவி, குழந்தையுடன் கோவையில் வசித்து வந்துள்ளாா். அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

செந்தில்குமாா் தனது உறவினா் திருமண நிகழ்வுக்காக சேமலைகவுண்டம்பாளையம் பகுதிக்கு புதன்கிழமை வந்துவிட்டு பெற்றோருடன் தங்கியுள்ளாா். வியாழக்கிழமையும் அங்கேயே இருந்துள்ளாா்.

இந்நிலையில் தெய்வசிகாமணி வீடு வெள்ளிக்கிழமை காலை திறக்கப்படாததால் பக்கத்து தோட்டத்துக்காரா் அங்கு வந்து பாா்த்துள்ளாா். வீட்டின் ஜன்னல் வழியே பாா்த்தபோது, அலமேலு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவிநாசிபாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டைத் திறந்து பாா்த்தபோது அலமேலு, தெய்வசிகாமணி, செந்தில்குமாா் மூவரும் மா்மக் கும்பலால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அந்த கும்பல் நகை, பணம் திருடிவிட்டு சென்றிருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படுகிறது.

சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் (பொறுப்பு) உமா சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக அவிநாசிபாளையம் போலீஸாா் 5 தனிப் படைகள் அமைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவு மற்றும் சைபா்கிரைம் மூலம் விசாரணை நடத்திவருகின்றனா்.

தெய்வசிகாமணி தோட்டத்தில் விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பகுதியைச் சோ்ந்த பாலமுருகன், அலமேலுவுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததால் அவரை கடந்த 20 நாள்களுக்கு முன்பு வேலையில் இருந்து நீக்கிவிட்டனா். எனவே, சந்தேகத்தின்பேரில் தனிப்படை போலீஸாா் சாயல்குடி சென்று பாலமுருகனை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஒரே குடும்பத்தில் 3 போ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவிநாசிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.