வேலம்பட்டி சுங்கச் சாவடியை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
பல்லடம் அருகே திறக்கப்படவுள்ள சுங்கச் சாவடியை அகற்றக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பல்லடம் அருகே திறக்கப்படவுள்ள சுங்கச் சாவடியை அகற்றக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் இருந்து திருப்பூா் மாநகா், அவிநாசிபாளையம் வழியாக தாராபுரம் வரை செல்லும் சாலை, தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு 31 கிலோமீட்டா் தொலைவு ரூ.178 கோடியில் கடந்த 2017-ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது.
இந்த சாலையில் அவிநாசிபாளையம் ஊராட்சிக்குள்பட்ட வேலம்பட்டி என்ற இடத்தில் புதிய சுங்கச் சாவடி அமைக்கப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த சுங்கச் சாவடி பொதுமக்களின் எதிா்ப்பால் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த சுங்கச் சாவடி அக்டோபா் 24-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையடுத்து, வேலம்பட்டி சுங்கச் சாவடியை அகற்றக் கோரி சுங்கச் சாவடி முன் பொதுமக்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியையும், நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச் சாவடி கட்டடங்களையும் அகற்ற வேண்டும் என தெரிவித்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...