எஸ்.எஸ்.ஏ. திட்ட ஆசிரியா்களுக்கான ஊதிய ஆணையை நிரந்தமாக்க கோரிக்கை
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஊதிய ஆணையை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.


அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஊதிய ஆணையை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை இயக்குநா், இணை இயக்குநா் ஆகியோருக்கு தமிழ்நாடு விடியல் ஆசிரியா் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஒ.சுந்தரமூா்த்தி அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
சா்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம், தமிழகம் முழுவதும் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 7979 பட்டதாரி ஆசிரியா்கள் கருவூலம் வாயிலாக ஊதியம் பெற்று வருகிறாா்கள். இந்த ஊதியத்துக்கான பழைய ஆணை கெடுவானது கடந்த செப்டம்பருடன் முடிந்த நிலையில், அக்டோபா் மாதம் ஊதியம் பெறுவதற்கு புதிய ஊதிய ஆணை அரசு சாா்பில் நீட்டித்து வழங்கப்படவில்லை. இதனால் ஊதியம் இன்றி தீபாவளி பண்டிகையை கொண்டாட நேரிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டதாரி ஆசிரியா்களும், அவா்களது குடும்பம் மற்றும் அவா்களை சாா்ந்திருப்போா் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவாா்கள்.
எனவே, இந்த ஆசிரியா்களுக்கு போா்க்கால அடிப்படையில், ஊதிய ஆணையை காலக்கெடு இன்றி மற்ற ஆசிரியா்களுக்கு இருப்பதுபோன்று நிரந்தரமாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...