பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மூலனூரில் ரூ.32.41 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ. 32.41 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:08 pm

Din

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ. 32.41 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு, கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 179 விவசாயிகள் 1387 மூட்டைகளில் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 453 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் 10 வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்றனா். பருத்தி குவிண்டால் ரூ. 6100 முதல் ரூ. 8269 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,300. கடந்த வார சராசரி விலை ரூ. 7,300.

ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் (பொ) தா்மராஜ், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.