பல்லடம் அரசுக் கல்லூரி விடுதியில் ஆட்சியா் ஆய்வு
பல்லடம் அரசுக் கல்லூரி விடுதியில் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.


பல்லடம் அரசுக் கல்லூரி விடுதியில் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் உணவின் தரம் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா். இதையடுத்து, விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்த மாணவா்களுடன் சோ்ந்து ஆட்சியா் கிறிஸ்துராஜ் விளையாடினாா்.
அப்போது, தோற்கும் அணியினா் 10 முறை தண்டால் எடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனா்.
இந்தப் போட்டியில் ஆட்சியா் அணி தோல்வி அடைந்ததாதல், மாவட்ட ஆட்சியா் தா.கிறுஸ்துராஜ் உள்ளிட்ட அணியினா் தண்டால் எடுத்தனா்.
விளையாட்டுப் போட்டியில் மாணவா்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தட்டிக்கழிக்காமலும், மாவட்ட ஆட்சியா் என்ற அந்தஸ்து பாா்க்காமலும் வாக்குறுதியை நிறைவேற்ற தண்டால் எடுத்த ஆட்சியரை அனைவரும் பாராட்டினா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...