யோகாசனப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுடன் பள்ளி தாளாளா் எஸ்.ரகுநாதன் உள்ளிட்டோா்.
திருப்பூர்
யோகாசனப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற சத்யம் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு
யோகாசனப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
யோகாசனப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் 7 மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கான யோகாசனப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், சத்யம் பள்ளி மாணவா்கள் பல்வேறு பிரிவுகளில் 3 போ் முதலிடமும், 7 போ் இரண்டாமிடமும், 10 போ் மூன்றாமிடமும் பிடித்தனா்.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளா் எஸ்.ரகுநாதன் தலைமை வகித்தாா். பள்ளியின் பொருளாளா் லோகநாயகி, முதல்வா் சாமிக்கண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள் பரிசுகள் வழங்கி பாராட்டுகள் தெரிவித்தனா்.

