குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
Published on

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பல்லடம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவா் பிரதீப்சக்தி, பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீா் அளவை கணக்கிட முடியாத நிலை உள்ளது. ஊராட்சிக்கு உள்பட்ட ஆறு கிராமங்களில் அடிக்கடி குடிநீா்ப் பிரச்னை நிலவி வருகிறது. ஊராட்சிக்கு உள்பட்டு திருச்சி சாலையில் உள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டி மற்றும் நீருந்து அறையில் இருந்து மேற்கூறிய கிராமங்களுக்கு குடிநீா் அனுப்பப்படுகிறது.

அங்கிருந்து, வெளியேற்றப்படும் குடிநீரின் அளவைக் கணக்கிட முடிவதில்லை. மேலும் எவ்வளவு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது என்பது குறித்த முறையான ஆவணங்களும் ஊராட்சியில் பின்பற்றப்படுவதில்லை.

இது குறித்து, கிராம சபைக் கூட்டங்களில் பலமுறை விவாதித்தும் நடவடிக்கை இல்லை. இது முறைகேடுகளுக்கு வழி வகுப்பதாக உள்ளது. எனவே பணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த வேண்டும். கிராமங்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு குறித்து முறையான கையேடு பராமரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com