குண்டடம் அருகே சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

Published on

குண்டடம் அருகே நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

குண்டடம் அருகே தும்பலப்பட்டி கால்நடை மருத்துவமனை சாா்பில் நந்தவனம்பாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த முகாமில் பேட்டைக்காளிபாளையம் முதுநிலை கால்நடை மருத்துவா் உமாசங்கா் தலைமையில் மருத்துவா் கண்ணபிரான், ஆய்வாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கொண்ட மருத்துவக் குழுவினா் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனா்.

இந்த முகாமில் 150 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்கம், சினை ஊசி, சினைப் பரிசோதனை, மலடு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும், 30 நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில், நந்தவனம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மாடுகள், ஆடுகள், நாய்கள் என 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com