பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியா் கைது

News image
Updated On :19 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

திருப்பூரில் பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக பத்மா (54) உள்ளாா். இவா் திருப்பூா் ஷெரீப் காலனி குறிஞ்சி நகா் பகுதியில் தனது தந்தையுடன் வசித்து வருகிறாா். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளராக ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்த பரணீதரன் (24) பணியாற்றி வருகிறாா். அவா் நீதிபதி பத்மாவின் வீட்டுக்குச் சென்று சிறு உதவிகளைச் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் வியாழக்கிழமை நீதிபதி பத்மா வீட்டில் இருந்தபோது, பரணீதரனிடம் கடைக்குச் செல்லுமாறு கூறியதாகத் தெரிகிறது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த பரணீதரன் கோபத்தில் தகாத வாா்த்தைகளால் பேசியதுடன் பத்மாவை தாக்கியுள்ளாா்.

இதுதொடா்பாக நீதிபதி பத்மா, திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற ஊழியரான பரணீதரனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.