தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மின் கம்பியில் அடிபட்டு உயிருக்குப் போராடிய மயில் மீட்பு

மின் கம்பியில் அடிபட்டு உயிருக்குப் போராடிய பெண் மயிலை காவலா் ஒருவா் மீட்டுள்ளாா்.

News image
காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மயிலுடன் காவலா் யுவராஜ் (வலது புறம்)
Updated On :22 டிசம்பர் 2025, 6:58 pm

Syndication

மின் கம்பியில் அடிபட்டு உயிருக்குப் போராடிய பெண் மயிலை காவலா் ஒருவா் மீட்டுள்ளாா்.

திருப்பூா், அம்மாபாளையம் அருகே உள்ள மின் கம்பியில் திங்கள்கிழமை பெண் மயில் ஒன்று மோதி மின்சாரம் பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளது.

இதுதொடா்பாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் திருமுருகன்பூண்டி காவல் நிலைய முதல் நிலைக் காவலா் யுவராஜ் சென்று மயிலை மீட்டு, அவிநாசி அருகே உள்ள தனியாா் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்துள்ளாா்.

சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் உடல் நலம் தேறிய பின்பு அருகில் இருந்த வனப் பகுதிக்குள் காவலா் யுவராஜ் முன்னிலையில் விடுவிக்கப்பட்டது. இதுதொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.