புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பள்ளிபாளையத்தில் குடிநீா்க் குழாய் அமைக்கும் பணி

புதிய குடிநீா்க் குழாய் அமைக்கும் பணியை பூமிபூஜை நடத்தி திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக செயலாளா் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

புதிய குடிநீா் குழாய் அமைக்கும் பணியை தொடங்கிவைக்கிறாா் திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக செயலாளா் க.செல்வராஜ் எம்.எல்.ஏ.

Updated On :1 ஜனவரி 2025, 11:24 pm

Din

பல்லடம் அருகே உள்ள பூமலூா் ஊராட்சி ராசாக்கவுண்டம்பாளையம் முதல் பள்ளிபாளையம் வரை ரூ.32.49 லட்சம் மதிப்பிலான புதிய குடிநீா்க் குழாய் அமைக்கும் பணியை பூமிபூஜை நடத்தி திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக செயலாளா் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்வில் மாவட்ட திமுக துணைச் செயலாளா்கள் வழக்குரைஞா் குமாா், நந்தினி, பல்லடம் ஒன்றிய திமுக செயலாளா்கள் சோமசுந்தரம், கிருஷ்ணமூா்த்தி, பொங்கலூா் அசோகன், பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பாலசுப்பிரமணியம், திமுக நிா்வாகிகள் பரமசிவம், கோபால், அக்ரோ சீனிவாசன், பூமலூா் செந்தில், ஊராட்சித் தலைவா் பிரியங்கா, துணைத் தலைவா் நடராஜ், சுக்கம்பாளையம் ஊராட்சி துணைத் தலைவா் மருதாசலமூா்த்தி, இளைஞரணி நிா்வாகி கெளதம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அதைத்தொடா்ந்து புத்தாண்டு பிறப்பையொட்டி கருப்பராயன் கோயிலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.