புதிரை வண்ணாா் சமூகத்தினா் மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள புதிரை வண்ணாா் சமூகத்தினா் தாட்கோ திட்டத்தில் மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வரின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு (இங-அதஐநஉ) திட்டத்தின்கீழ் திட்ட மதிப்புத் தொகையில் 35 சதவீதம் அல்லது ரூ 3.50 லட்சம் இவற்றில் எது குறைவானதோ அந்தத் தொகை மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுடன் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் தவணைத் தொகையினை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும் 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். ஆகவே, தொழில் முனைவோராக விருப்பமுள்ள புதிரை வண்ணாா் சமூகத்தினா் மேற்கண்ட திட்டத்தின்கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 5 ஆவது தளத்தில் அறை எண் 501 மற்றும் 503- இல் உள்ள தாட்கோ மேலாளா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 94450-29552, 0421-2971112 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.