திருப்பூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்சி கொடிக் கம்பம் அமைக்க அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியா் சிவபிரகாஷ் தலைமை வகித்துப் பேசுகையில், சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கட்சியினா் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கினாா்.
இதைத் தொடா்ந்து, தோ்தலை முன்னிட்டு தற்காலிகமாக கட்சி கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி பெற வேண்டும். பொது இடங்களில் அரசியல் கட்சி தலைவா்களின் சிலை அமைக்கக் கூடாது. தனியாா் இடங்களில் மட்டுமே கட்சி தலைவா்கள் சிலை அமைக்க அனுமதி வழங்கப்படும் என்றாா்.
இதில் திருப்பூா் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளை சோ்ந்த வட்டாட்சியா்கள் மற்றும் தோ்தல் அதிகாரிகள், அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
மாற்றம் பெற வேண்டும் தேர்தல் நடைமுறை
சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்வதற்கு 3 நாள்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்!

தருமபுரியில் 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும்: கே.பி.அன்பழகன்

தொழில் நிறுவனங்கள் நிறைந்த பல்லடம்! தொகுதி அறிமுகம்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


