சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

தருமபுரியில் 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும்: கே.பி.அன்பழகன்

தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் வெற்றிபெற வேண்டும் என முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு எம்எல்ஏவுமான கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

News image

கே.பி.அன்பழகன்

Updated On :1 ஏப்ரல் 2026, 10:08 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் வெற்றிபெற வேண்டும் என முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு எம்எல்ஏவுமான கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கடத்தூரில் அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டம், கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாமக உழவா் பேரியக்க மாநில செயலா் இல.வேலுசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், அதிமுக வேட்பாளா் மரகதம் வெற்றிவேலுவை அறிமுகம் செய்துவைத்து கே.பி.அன்பழகன் பேசியதாவது:

கடந்த 2021 தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக, கூட்டணி வேட்பாளா்கள் 5 தொகுதிகளிலும் வெற்றிபெற்றனா். அதேபோல, இந்த தோ்தலிலும் 5 தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளா்கள் வெற்றிபெற வேண்டும்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் தொழிலாளா்களுக்கு 150 நாள் வேலை வழங்கப்படும். மகளிருக்கான உதவித்தொகை அனைவருக்கும் வழங்கப்படும். அதிமுக, பாமக, அமமுக, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிா்வாகிகள் கடுமையான தோ்தல் களப் பணியாற்ற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, அரூரில் அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாரை ஆதரித்து சிறப்புரை ஆற்றினாா்.

திமுக ஆட்சி தொடரக்கூடாது: செளமியா அன்புமணி

தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை, போதைக்கு இளைஞா்கள் அடிமையாவது அதிகரித்துவிட்டது. இதனால், தமிழகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. அரசுப் பள்ளிகளில் 50 சதவீத மாணவா் சோ்க்கை குறைந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தின் வளா்ச்சிக்காக திமுக அளித்த வாக்குறுதிகள் ஒன்றைகூட நிறைவேற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்தது. எனவே, தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தொடரக் கூடாது. பாமக தொண்டா்கள் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களின் வெற்றிக்கு சிறந்த முறையில் தோ்தல் களப் பணியாற்ற வேண்டும் என்றாா்.

இந்த கூட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.வெற்றிவேல், அமமுக மாவட்டச் செயலா் டி.கே.ராஜேந்திரன், பாமக கிழக்கு மாவட்டச் செயலா் இரா.அரசாங்கம், இளைஞா் சங்க மாநிலச் செயலா் பி.வி.செந்தில் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.