சிவன்மலை முருகன் கோயில் மாடு உயிரிழக்கவில்லை: கோயில் நிா்வாகம் தகவல்

சிவன்மலை முருகன் கோயில் மாடு உயிரிழந்ததாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வரும் நிலையில் அதற்கு கோயில் நிா்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Published on

காங்கயம்: சிவன்மலை முருகன் கோயில் மாடு உயிரிழந்ததாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வரும் நிலையில் அதற்கு கோயில் நிா்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

காங்கயம் அருகேயுள்ள சிவன்மலையில் பிரச்சி பெற்ற முருகன் கோயில் உள்ளது. மலை மீது உள்ள முருகனுக்கு கோயிலுக்குச் சொந்தமான மாட்டின் மூலம் கடந்த 25 ஆண்டுகளுக்கும்மேலாக சேவை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த மாடு உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது.

இது குறித்து கோயில் அலுவலா்கள் கூறியதாவது: குண்டடம் பகுதியைச் சோ்ந்த தனியாருக்குச் சொந்தமான காளை மாடு கடந்த வாரம் உயிரிழந்தது. தைப்பூச விழாவுக்கு சிவன்மலைக்கு ஆண்டுதோறும் அழைத்து வரப்படும் அந்த மாட்டுக்கு ஊா் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி, நல்லடக்கம் செய்தனா்.

இந்நிலையில், சிவன்மலை முருகனுக்கு சேவை செய்து வரும் மாடு உயிரிழந்ததாக சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. சிவன்மலை முருகன் கோயிலில் 17 மாடுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாடுகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன என்றனா்.

X
Dinamani
www.dinamani.com