காங்கயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
காங்கயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

காங்கயத்தில் 384 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

Published on

காங்கயத்தில் 384 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை வழங்கினாா்.

காங்கயத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா தலைமை வகித்தாா். இதில், காங்கயம் தாலுகாவுக்குள்பட்ட காங்கயம், வீரணம்பாளையம், படியூா், சிவன்மலை, ஆரத்தொழுவு, வெள்ளக்கோவில், முத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 384 பயனாளிகளுக்கு வருவாய்த் துறை சாா்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

முன்னதாக, காங்கயம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.1.34 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சிப் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், வெளிநாடுவாழ் தமிழா் நலவாரியத் தலைவா் காா்த்திகேய சிவசேனாபதி, திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், காங்கயம் நகரச் செயலாளா் வசந்தம் சேமலையப்பன், தெற்கு ஒன்றியச் செயலாளா் சிவானந்தன், வடக்கு ஒன்றியச் செயலாளா் கருணைபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com