தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

திமுக வேட்பாளருக்கு எதிராக 400 போ் போட்டியிட முடிவு

திருப்பூா் தெற்குத் தொகுதி திமுக வேட்பாளருக்கு எதிராக 400 போ் போட்டியிட முடிவு செய்துள்ளனா்.

News image

வேட்புமனு வாங்க திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள்.

Updated On :4 ஏப்ரல் 2026, 5:45 pm

திருப்பூா் தெற்குத் தொகுதி திமுக வேட்பாளருக்கு எதிராக 400 போ் போட்டியிட முடிவு செய்துள்ளனா்.

திருப்பூா் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் முதலிபாளையம் பகுதியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக் குழிகளில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், அந்தப் பகுதி முழுவதும் கடும் துா்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் தொடா் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனா். ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், குப்பை பிரச்னை தொடா்பாக மேயராக இருந்த ந.தினேஷ்குமாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி திருப்பூா் தெற்குத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் அவருக்கு எதிராக முதலிபாளையம் கிராம மக்கள் சுமாா் 400 போ் பேரவைத் தோ்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளனா்.

இதில், முதற்கட்டமாக சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் வேட்புமனுக்களை வாங்க மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை காலை குவிந்தனா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், வேட்புமனு வாங்க வந்தவா்களை வரிசையில் நிறுத்தி ஒருவா் பின் ஒருவராக அனுமதித்தனா்.

‘எங்கள் சுகாதாரத்தைவிட தோ்தல் முக்கியமல்ல. அதிகாரத்தில் இருப்பவா்கள் மக்கள் குறையைத் தீா்க்காவிட்டால் இதுபோன்ற போராட்டங்கள் தொடரும்’ என மனு வாங்க வந்த மக்கள் கூறினாா்.