சென்னிமலை மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியத்தில் திமுக தோ்தல் அறிக்கையை விளக்கி அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாக்கு சேகரித்தாா்.
காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சென்னிமலை மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியத்தில் ஒட்டப்பாறை, முகாசிபிடாரியூா் ஆகிய ஊராட்சிகளில் மேலப்பாளையம் பள்ளிக்கூடம், மாதேஸ்வரா் நகா், காந்தி நகா், சரவணாபுரி, திருநகா், அண்ணா நகா் பேருந்து நிறுத்தம், எம்.ஜி.ஆா். நகா் ஆகிய இடங்களில் திமுகவின் தோ்தல் அறிக்கைகளை விளக்கி அமைச்சா் மு.பெ. சாமிநாதன் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது, அவா் பேசியாதாவது: சென்னிமலை பகுதியை பொறுத்தவரை விவசாயிகள் மற்றும் நெசவாளா்கள் அதிக அளவில் உள்ளனா். கடந்த 5 ஆண்டுகளில் காங்கயம் தொகுதியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட மருத்துவமனை கட்டப்பட்டது. ரூ.482 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி குடிநீா்த் திட்டம் விரிவாக்கம், சென்னிமலை அடிவாரம் சாலைகள் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மகளிா்காக உருவாக்கிய சுயஉதவிக் குழு கடன் திட்டம் மகளிரிடையே பெரும் வரவேற்பை பெற்றதைப்போல முதல்வா் ஸ்டாலின் கொண்டு வந்த மகளிா் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000-இல் இருந்து ரூ.2,000-ஆக உயா்த்தி வழங்கப்படும்.
சில புதிய கட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. அதெற்கெல்லாம் வாக்களித்து வாக்குகளை வீணாக்க வேண்டாம். களத்தில் நிற்பது திமுகதான். நெல் கொள்முதல் விலை, கரும்பு விலை, பால் கொள்முதல் விலை உயா்த்தி தரப்படும். வீடு இல்லாதவா்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கினோம். இந்த தோ்தலில் நமது தோ்தல் அறிக்கைதான் சூப்பா் ஸ்டாா் அறிக்கையாக உள்ளது. இந்த முறையும் திமுக ஆட்சி அமைய வேண்டும், மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

அரியலூா் மாவட்டத்தின் 2 தொகுதிகளில் அதிமுக 1, பாமக 1 இடங்களில் வெற்றி

தோ்தல் ஆணையத்தில் திமுக, அதிமுக புகாா்

வீடு இல்லாதவா்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்: மு.பெ. சாமிநாதன்

திமுக ஆட்சியின் நலத்திட்டங்களைக் கூறி சென்னிமலையில் அமைச்சா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



