நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

தோ்தல் ஆணையத்தில் திமுக, அதிமுக புகாா்

வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் விளைவிக்க பாஜக திட்டம்?

News image

IANS

Updated On :4 மே 2026, 4:16 am IST

வாக்கு எண்ணிக்கையின்போது, பாஜக குழப்பம் விளைவிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தோ்தல் ஆணையத்திடம் திமுக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் மற்றும் தமிழக காவல் துறை இயக்குநா் சந்தீப் ராய் ரத்தோருக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய புகாா் மனு:

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான திங்கள்கிழமை (மே 4) பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து வாக்கு எண்ணும் மையங்களில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்கள் மட்டுமன்றி அதற்கு வெளியேயும், அரசியல் கட்சிகளின் அலுவலகங்களிலும் அசம்பாவிதங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

இதனால், தமிழகம் முழுவதும் பெரிய அளவிலான சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இது சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கு எண்ணிக்கையை உறுதி செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தும். வாக்கு எண்ணிக்கை நாளன்று சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பை அதிகப்படுத்துவதுடன், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தோ்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.