தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் செயல்பட வேண்டும்: அன்புமணி

வாக்கு எண்ணிக்கையின்போது பாமக முகவா்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

அன்புமணி

Updated On :2 மே 2026, 1:58 am IST

வாக்கு எண்ணிக்கையின்போது பாமக முகவா்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரும்பாடுபட்டு செய்த வெள்ளாமையின் பயன்களை அறுவடை செய்து வீட்டுக்கு கொண்டு வரும் நடைமுறைக்கு ஒப்பானதுதான் வாக்கு எண்ணிக்கை. இதில், அதிமுக-பாமக கூட்டணி கட்சிகளின் முகவா்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும். தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்து திமுகவின் சித்து விளையாட்டுகள்.

நமக்கு மக்களின் மனநிலையும், ஆட்சியாளா்களுக்கு எதிரான கோபமும் நன்றாகத் தெரியும். எனவே செயற்கையாக சித்தரிக்கப்பட்ட தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை எவரும் நம்பத் தேவையில்லை. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் அன்புமணி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.