தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுப்பதன் முக்கியத்துவம் குறித்து பாமக சாா்பில் அனைத்துக் கட்சிகள், சமுதாய தலைவா்களின் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தவெக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, தாவாக, கொமதேக, தமாகா உள்பட 43 கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் தமிழக அரசின் கொள்கை முடிவாக அறிவிக்கவேண்டும் என ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை இன்று காலை நேரில் சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பாமக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்தை முதல்வரிடம் வழங்கிய அன்புமணி, வருகின்ற பட்ஜெட் தொடரிலேயே சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான அறிவிப்பை வெளியிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
Summary
Caste-based census: Anbumani meets Chief Minister Joseph Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளர்கள்!அன்புமணி அறிவிப்பு

தில்லியில் முதல்வர் விஜய்! தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறை மரியாதை!

புதிய கேரள பேரவைத் தலைவர் ராதாகிருஷ்ணன் - முதல்வர் வி.டி. சதீசன் சந்திப்பு!

செஞ்சி தொகுதியை கைப்பற்றிய பாமக
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP




