சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 1,040 உயர்ந்துள்ளது.
பல்வேறு சர்வதேச காரணங்களால் சென்னையில் தங்கம் விலை கடந்த வாரம் முதல் தொடர்ந்து குறைந்து வந்தது.
கடந்த ஒரே வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3,440 குறைந்து சனிக்கிழமை ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனையானது. தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை விலை மீண்டும் குறைந்தது.
அதன்படி, கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.14,070-க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,12,560-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 9) கிராமுக்கு ரூ. 130 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,200-க்கும் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ. 1,13,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 270-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Summary
After a continuous decline in the price of ornamental gold in Chennai, the price rose by Rs. 1,040 per sovereign on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது?

தங்கம் விலை இன்று(மே 26) குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை இன்று (மே 19) உயர்வு! எவ்வளவு தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP




