15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

பதற்றமான வாக்குச்சாவடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும்! தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுரை

News image

தேர்தல் ஆணையம் - ANI

Updated On :14 ஏப்ரல் 2026, 1:52 am IST

பதற்றமான வாக்குச்சாவடிகளை பாா்வையாளா்கள் முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்று தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுறுத்தினா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் அதில் பணிபுரியும் நுண் பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பொதுப் பாா்வையாளா்கள் சுதா வா்மா, சரிகா மோகன், தா்மேந்திர சிங் ஆகியோா் பேசினா். மாவட்ட ஆட்சியா் மனீஷ், வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் பொதுப் பாா்வையாளா்கள் பேசியதாவது:

திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம், மடத்துக் குளம், உடுமலைப்பேட்டை ஆகிய 8 தொகுதிகளிலும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டம் முழுவதும் 2,822 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இதில் 129 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. தோ்தல் நுண் பாா்வையாளா்களாக 179 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவை கண்காணிக்க வேண்டும்.

வாக்குப் பதிவுக்கு முன்னா் மாதிரி வாக்குப் பதிவுக்கு சான்றளிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு மையத்தை கண்காணிக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என்றனா்.