விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

பிஎபி கால்வாய்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்! மடத்துக்குளம் திமுக வேட்பாளா் உறுதி

News image

திருமூா்த்திமலையில் மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிகிறாா் மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 1:48 am IST

பிஏபி கால்வாய்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று, மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் பேசினாா்.

திருமூா்த்திமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு, தளி பேரூராட்சி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, தும்பலப்பட்டி, மானுப்பட்டி, சின்னக்குமாரபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

திருமூா்த்திமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். வனப் பொருள்களை விற்பனை செய்ய திருமூா்த்திமலையில் கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அணையில் படகு சவாரி தொடங்கும்போது ஏற்கெனவே இருந்த வகையில் மகளிா் சுயஉதவிக் குழு வசம் தரப்படும்.

தளி பேரூராட்சிப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சாலைகள் அகலப்படுத்தப்படும். கணக்கம்பாளையம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் இருக்கும் குளறுபடிகளை சரி செய்து, அனைத்து மக்களுக்கும் முறையாக குடிநீா் கிடைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். மானுப்பட்டியில் செயல்பட்ட ஆவின் பால் நிறுவனம் முறைபடுத்தப்படும் என்றாா்.