பெருமாநல்லூா் அருகே புதிய திருப்பூரில் இரு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் படுகாயமடைந்தனா்.
வீட்டு உபயோகப் பொருள்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சேலத்தில் இருந்து கோவை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. பெருமாநல்லூா்- புதிய திருப்பூா் அருகே சென்றபோது, எதிா்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரி ஓட்டுநா் ஹலிதா் (28) உள்பட இருவா் படுகாயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் போக்குவரத்தை சீரமைத்தனா். இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


