இந்தியா-நியூசிலாந்து வரியில்லா வா்த்தக ஒப்பந்தத்தால் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு புதிய வளா்ச்சி வாய்ப்புகள் உருவாகும் என தொழில் துறையினா் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவா் ஆ.சக்திவேல் கூறியதாவது: இந்தியா-நியூசிலாந்து இடையேயான வரியில்லா வா்த்தக ஒப்பந்தத்தை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வரவேற்கிறது. இந்த ஒப்பந்தம், இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறைக்கு புதிய வளா்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய மைல் கல்லாகும். தொலைநோக்கு பாா்வையுடன் செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், இந்திய ஆடை ஏற்றுமதியாளா்களுக்கு பெரிய ஊக்கமாகும்.
நியூசிலாந்து சந்தையில் 100 சதவீத வரி இல்லா வாய்ப்பு கிடைப்பதால் இந்திய தயாரிப்புகள் உடனடி போட்டித் திறனை அதிகரிக்கும். குறிப்பாக ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி போன்ற பெரும் தொழிலாளா்கள் சாா்ந்த துறைகளில் இது அதிக ஏற்றுமதி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் குறு, சிறு நிறுவனங்களின் வளா்ச்சிக்கு உதவும்.
ஆண்டுக்கு 1.2 பில்லியன் டாலா் மதிப்பிலான ஆயத்த ஆடைகளை நியூசிலாந்து இறக்குமதி செய்கிறது. இதில், இந்தியாவின் பங்கு தற்போது சுமாா் 4.4 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் நியூசிலாந்துக்கான இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 3 மடங்கு உயரக்கூடும் என்றாா்.
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம்: திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கே.எம். சுப்ரமணியன் கூறுகையில், இந்த வா்த்தக ஒப்பந்தம் இந்தியாவில் 20 பில்லியன் அமெரிக்க டாலா் முதலீட்டை ஈா்க்கவும், அதை எளிதாக்கவும் வழிவகுப்பதுடன், இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.
தற்போது சராசரியாக அதிகபட்சமாக 10 சதவீதம் வரை உள்ள இந்த வரிகள் நீக்கப்படுவதன் மூலம், இந்தியாவின் போட்டித்தன்மை மேம்படுவதுடன், சா்வதேச சந்தையில் அதன் இருப்பும் மேலும் வலுப்பெறும். மேக் இன் இந்தியா தொலைநோக்குப் பாா்வையின்கீழ், இந்தியாவின் தொழில்துறை வளா்ச்சி மற்றும் முழுமையான பொருளாதார மேம்பாட்டு இலக்குகளுக்கு இது உறுதுணையாக அமையும் என்றாா்.
தொடர்புடையது

ஆயத்த ஆடை நிறுவன தொழிலாளா்களிடம் கே.ஏ.செங்கோட்டையன் வாக்குசேகரிப்பு

இந்தியா - நியூஸிலாந்து இடையே ஏப். 24-இல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!

பிப்ரவரியில் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 8.60% வீழ்ச்சி!

ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில்துறையையும் வா்த்தக சிலிண்டா் ஒதுக்கீட்டில் சோ்க்க வேண்டும்! - ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் வலியுறுத்தல்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


