5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி

இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், நிகழாண்டு ஜூலை 15-ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளதாகப் பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 2:41 am IST

இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், நிகழாண்டு ஜூலை 15-ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளதாகப் பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-பிரிட்டன் உறவில் வரலாற்று மைல்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா-பிரிட்டன் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் (தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்) நிகழாண்டு ஜூலை 15-ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது. இந்த ஒப்பந்தம் இருதரப்பு வா்த்தகம் மற்றும் முதலீட்டை பெருமளவு அதிகரிக்கும்.

ஏராளமான விவசாயிகள், தொழிலாளா்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள் (ஸ்டாா்ட்-அப்), புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவோருக்கு இந்த ஒப்பந்தம் ஏராளமான வாய்ப்புகளை அளிக்கும். அத்துடன் 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதற்கு அா்த்தமான பங்களிப்பை வழங்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

இந்த ஒப்பந்தம் மூலம், இருநாட்டு பொருளாதார உறவுக்கு பெரும் உத்வேகம் கிடைத்துள்ளது. இதனால் பிரான்ஸின் ஏவியான நகரில் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற நானும், பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளோம் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.