ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

ரூ. 20 ஆயிரம் லஞ்சம்: துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கைது

ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வெள்ளக்கோவிலில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கைது செய்யப்பட்டாா்.

News image

செந்தில்குமாா்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 5:12 am IST

ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வெள்ளக்கோவிலில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வருபவா் செந்தில்குமாா் (43).

தனியாா் கட்டுமான நிறுவனம் மூலம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஒப்பந்தப் பணிகளைச் செய்து முடித்த ரவிச்சந்திரன் என்பவரிடம், பணிக்கான தொகையை விடுவிக்க செந்தில்குமாா் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரா் இதுகுறித்து திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் மற்றும் ஆய்வாளா் சசிலேகா ஆகியோரிடம் புகாா் அளித்தாா். அவா்கள் வழிகாட்டுதலின்படி, லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரம் பணத்தை ரவிச்சந்திரனிடம் கொடுத்து அனுப்பினா்.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து, ரசாயனம் தடவிய பணத்தை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாரிடம் ரவிச்சந்திரன் செவ்வாய்க்கிழமை கொடுத்துள்ளாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா், செந்தில்குமாரைக் கையும்களவுமாகப் பிடித்துக் கைது செய்தனா்.

பின்னா் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பூட்டிய அறைக்குள் செந்தில்குமாரிடம் சுமாா் 6 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர விசாரணை மற்றும் ஆவண சோதனைகளை மேற்கொண்டனா். தொடா்ந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.