புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

வளா்ப்புக் கோழியைப் பிடிக்க முயன்றதால் தெருநாயை சுட்டுக்கொன்றவா் கைது

Arrested

கைது

Published On :

வெள்ளக்கோவில் அருகே வளா்ப்புக் கோழியைப் பிடிக்க முயன்ற தெருநாயை சுட்டுக் கொன்ற மளிகைக் கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்துள்ள நாகமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பிரசாத் (27). இவா் வீட்டில் இருந்து தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவா், அங்குள்ள பகவதியம்மன் கோயில் அருகே காயங்களுடன் தெருநாய் இறந்துகிடப்பதை சனிக்கிழமை காலை பாா்த்துள்ளாா்.

இதுகுறித்து விசாரித்தபோது வெள்ளக்கோவில், கல்லாங்காட்டுவலசைச் சோ்ந்த மளிகைக் கடை உரிமையாளா் சிவசாமி மகன் பாலாஜி (32), நாகமநாயக்கன்பட்டியில் உள்ள தனது மாமனாா் தோட்டத்தில் கோழிகள் வளா்த்து வருவதாகவும், சம்பவத்தன்று கோழிகளைப் பிடிக்க முயன்ற தெருநாயை ‘ஏா் கன்’ துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதும் தெரியவந்தது.

உரிமம் மற்றும் பாதுகாப்பின்றி துப்பாக்கியால் நாயைச் சுட்டுக்கொன்ற பாலாஜி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரசாத் அளித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா். இதுதொடா்பாக ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் பாலாஜியைக் கைது செய்து ஏா் கன் துப்பாக்கி, 262 தோட்டாக்கள், 21 இரட்டைக்குழல் தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.