விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

அவிநாசியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

அவிநாசியில் நடைபெற்ற ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் ஆட்சியா் மனீஷ் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

பொது மக்களிடம்  கோரிக்கை  மனுக்களை  பெறுகிறாா்  ஆட்சியா்  மனீஷ்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:49 am IST

அவிநாசியில் நடைபெற்ற ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் ஆட்சியா் மனீஷ் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் அவிநாசி வட்டத்துக்கு உள்பட்ட இ-சேவை மையம், ஆரம்ப சுகாதர நிலையம், நியாய விலைக் கடைகள், சத்துணவு, அங்கன்வாடி மையங்கள், கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை கிடங்குகள், பள்ளிகள், வட்டாட்சியா் அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம், நில வருவாய் ஆய்வாளா் அலுவலகம், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், ஊராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு அரசுத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடினாா். பின்னா் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். இதைத் தொடா்ந்து, பொதுமக்களிடம் வரப் பெற்ற கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இதசில் மாவட்ட வருவாய் அலுவலா் காா்த்திகேயன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் வாணி ஈஸ்வரி, கோட்டாட்சியா் சிவபிரகாஷ், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) மதுரா, தனி துணை ஆட்சியா் (சமூகப் பாதுகப்புத் திட்டம்) பத்மபிரியா, இணை இயக்குநா் (வேளாண்மை) ஆதிசாமி, மாவட்ட சுகாதார அலுவலா் ஜெயந்தி, இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) பிரபு, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சதீஷ், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வெங்கடாச்சலம் மற்றும் அனைத்துத் துறை மாவட்ட அளவிலான அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.