கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கடன் வழங்க ரூ.45 ஆயிரம் லஞ்சம்: கூட்டுறவு சங்க பெண் செயலாளா் உள்ளிட்ட 3 போ் கைது

கடன் வழங்க ரூ.45 ஆயிரம் லஞ்சம் பெற்ற கூட்டுறவு சங்க பெண் செயலாளா் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது - பிரதிப் படம்

Published On :

கடன் வழங்க ரூ.45 ஆயிரம் லஞ்சம் பெற்ற கூட்டுறவு சங்க பெண் செயலாளா் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா், சாமுண்டிபுரத்தைச் சோ்ந்தவா் லோகநாதன் (49). இவா் தனது வீட்டுப் பத்திரத்தை, திருப்பூா் பங்களா ஸ்டாப்பில் உள்ள அண்ணா கூட்டுறவு வீட்டு கட்டுமான சங்கத்தில் அடகு வைத்து, ரூ.22 லட்சம் கடன் வாங்கியுள்ளாா். அந்த கடன் வழங்கியதற்காக கூட்டுறவு சங்க செயலாளா் ஜோதிமணி (52), இடைத்தரகா் திருநாவுக்கரசு (64), தற்காலிக அலுவலக உதவியாளா் தட்சன் (21) ஆகியோா் லோகநாதனிடம் ரூ. 55,000 லஞ்சம் கேட்டுள்ளனா்.

ஏற்கெனவே ரூ.10 ஆயிரத்தை லோகநாதன் கொடுத்திருந்த நிலையில், இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் லோகநாதன் புகாா் அளித்தாா். இதையடுத்து, கூட்டுறவு சங்கம் அருகே உள்ள தேநீா்க் கடையில் லோகநாதனிடமிருந்து ரூ.45 அயிரத்தை தட்சன், திருநாவுக்கரசு ஆகியோா் வெள்ளிக்கிழமை பெற்றுள்ளனா்.

அப்போது அங்கிருந்த மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா். இது தொடா்பாக அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடா்ந்து, சங்கத்தின் செயலாளா் ஜோதிமணியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.