காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

கொலை முயற்சி வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

சிறை - பிரதிப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 3:12 am IST

கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான 2 இளைஞா்கள் குண்டா் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருப்பூா், 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இ.பி. காலனி அருகே கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி விஷ்ணு, அகஸ்டின் ஆகியோரை தாக்கிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் ராகுல்ராஜ் (28) மற்றும் சூா்யா (29) மீது 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு திருப்பூா் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனா்.

இவா்கள், வருங்காலங்களில் இதுபோன்று பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பொதுமக்கள் மனதில் அச்சத்தையும், பாதுகாப்பற்ற சூழ்நிலையையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவா்களின், இந்த சட்ட விரோதச் செயலைத் தடுக்க வேண்டி, அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்க, திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரி ஆணை பிறப்பித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.