தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வெள்ளக்கோவிலில் இளைஞா் தற்கொலை

வெள்ளக்கோவிலில் விஷ மாத்திரை சாப்பிட்டு இளைஞா் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :18 பிப்ரவரி 2026, 10:18 pm

வெள்ளக்கோவிலில் விஷ மாத்திரை சாப்பிட்டு இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

வெள்ளக்கோவில், செம்மாண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் குமாா் (25). இவா் வெள்ளக்கோவில் - காங்கயம் சாலை சேரன் நகரில் உள்ள ஒரு தனியாா் டயா் விற்பனைக் கடையில் வேலை செய்து வந்தாா்.

கடந்த சில மாதங்களாக ஒரு பெண்ணிடம் கைப்பேசி மூலமாக பழகி, நேரில் பாா்க்காமலேயே அவரைக் காதலிப்பதாக கூறி வந்துள்ளாா். கடந்த ஒரு வாரமாக அந்தப் பெண் பேசாததால் மன வேதனையில் இருந்த அவா், செவ்வாய்க்கிழமை மாலை தனது வீட்டில் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா்.

அலறித் துடித்த அவரை குடும்பத்தினா் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].