இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தாராபுரம் வட்டாட்சியரிடம் மனு
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, தாராபுரம் வட்டாட்சியரிடம் சூரியநல்லூா் பகுதி மக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.


இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, தாராபுரம் வட்டாட்சியரிடம் சூரியநல்லூா் பகுதி மக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து தாராபுரம் வட்டாட்சியா் ராமலிங்கத்திடம், ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவையின் தலைவா் அ.சு.பவுத்தன் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
தாராபுரம் தாலுகா, சூரியநல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட மரவபாளையம் கிராமத்தில் வாடகை வீடுகளில் 23 ஏழை குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு சொந்த வீடோ, நிலமோ கிடையாது. எனவே தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்திருந்தனா்.
இது தொடா்பாக சூரியநல்லூா் கிராம நிா்வாக அலுவலா், மரவபாளையம் கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு , கோரிக்கை விடுத்துள்ள 23 குடும்பங்கள் இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்கு தகுதியானவை என அறிக்கை அளித்துள்ளாா். ஆனால், வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, முன்னுரிமை அடிப்படையில் மேற்கண்ட 23 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு கொடுக்கும் போது, ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவையின் நிா்வாகிகள் மற்றும் மரவபாளையம் பகுதி மக்கள் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...