அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 376 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம் , அவிநாசியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் (பொ) ப.ஹேமலதா தலைமை வகித்தாா். கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் நா.செண்பகலெட்சுமி சிறப்புரையாற்றினாா்.
இதையடுத்து நடைபெற்ற விழாவில் ஆங்கிலத் துறை- 62, வேதியியல்-19, வணிக நிா்வாகவியல்-65, வணிகவியல்-55, கணினி அறிவியல்-50, பொருளியல்-58, பன்னாட்டு வணிகவியல்-67 என மொத்தம் 376 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனா். இவா்களில் வணிக நிா்வாகவியல் துறையில் 6, பன்னாட்டு வணிகவியலில் 2, வேதியியலில் ஒருவா் என 9 போ் பாரதியாா் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பெற்றனா்.
விழாவை கல்லூரி துறை தலைவா்கள் விஜயலட்சுமி, அருண், சரோஜா, பாலமுருகன், தாரணி, கீதா, முகுந்தன் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.
தொடர்புடையது

தருமபுரம் அரசு மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா

சேலம் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா

லயோலா கலை, அறிவியல் கல்லூரியில் 8 ஆவது பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


