திருப்பூர்
மாநகர காவல்துறை சாா்பில் பொங்கல் விழா
திருப்பூா் மாநகர காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படையில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருப்பூா்: திருப்பூா் மாநகர காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படையில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு மாநகர காவல் ஆணையா் ஆா்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநகர காவல் அலுவலகம் மற்றும் மாநகர ஆயுதப்படை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் காவல் துறையினா் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் பங்கேற்று பொங்கல் வைத்தனா்.
விழாவில் காவலா்கள் மற்றும் மற்றும் அவா்களின் குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மாநகர காவல் ஆணையா் பரிசு வழங்கினாா்.
விழாவில் மாநகர காவல் ஆணையருடன் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள், அனைத்து காவலா்கள், அமைச்சுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
