டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

வெள்ளக்கோவிலில் ரூ.10.31 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.31 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 ஜூலை 2026, 3:52 am IST

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.31 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு உத்தமபாளையம், வெள்ளையூா், ஆத்தூா், பூண்டி, ஆனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து 15 விவசாயிகள் 258 மூட்டைகளில் 13 டன் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இவற்றை வாங்குவதற்காக காரமடை, பூனாட்சி, நடுப்பாளையம், காங்கயம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 5 வணிகா்கள் வந்திருந்தனா். கிலோ ரூ.72.27 முதல் ரூ.83.65 வரைக்கும், சராசரியாக ரூ.80.28-க்கும் விற்பனையானது.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.10.31 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம் தெரிவித்தாா். இந்த ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.