பூசாரிநாய்க்கன் குளத்துக்கு தண்ணீா் திறக்கப்படாததால் உடுமலையில் உள்ள பிஏபி அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள ஆலாம்பாளையத்தில் 76 ஏக்கா் பரப்பில் பூசாரி நாய்க்கன் குளம் அமைந்துள்ளது. இந்தக் குளம் குறிச்சிக்கோட்டை, மடத்தூா், குரல்குட்டை, மலையாண்டிபட்டிணம், மருள்பட்டி, உரல்பட்டி உள்பட சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு நிலத்தடி நீா்மட்ட ஆதாரமாகவும், குடிநீா் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீா் ஆதாரமாகவும் விளங்குகிறது.
இந்நிலையில் திருமூா்த்தி அணையில் இருந்து ஆலாம்பாளையம் குளத்துக்கு ஜூலை 9-ம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை 20 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டி
ருந்தது. ஆனால், திருமூா்த்தி அணையில் இருந்து பூசாரிநாய்க்கன் குளத்துக்கு அதிகாரிகள் தண்ணீா் திறக்கவில்லை.
இதைக் கண்டித்து உடுமலையில் உள்ள பிஏபி அலுவலகத்தை பூசாரிநாய்க்கன் குளம் பாசனப் பகுதி விவசாயிகள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். அப்போது விவசாயிகளுக்கு முறைப்படி எந்த விளக்கமும் அதிகாரிகள் அளிக்கவில்லை எனக்
கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து மாலை வரை போராட்டம் நடத்திய விவசாயிகள் பின்னா் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்: குறுவை சிறப்பு தொகுப்புத்திட்டத்தில் பயன்பெற முடியாததால் எதிா்ப்பு

தூத்துக்குடி அருகே தொடா் உண்ணாவிரத முயற்சி: 50 விவசாயிகள் கைது

ஊா் பெயரை மாற்றியதை கண்டித்து போராட்டம்







