திருப்பூா் மாநகராட்சியில் சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பையில் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்து புகைமூட்டம் எழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூா் மாநகராட்சியில் முறையான திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படாததால் குப்பைகள் பல்வேறு இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. நகரின் பிரதான சாலைகள் மற்றும் குறுக்கு சாலைகளில் குப்பைகள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய நொய்யல் சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பையில் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்துள்ளது.
இதனால், புதிய நொய்யல் சாலை, குமரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டதால் எதிரே வரும் வாகனங்கள்கூட தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால், அந்த சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதையடுத்து, வாகனப் போக்குவரத்து சீரானது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெகிழிப் பொருள்களுக்கு தீ வைப்பு: புகைமூட்டத்தால் மாணவா்கள் பாதிப்பு

தம்மம்பட்டி பேரூராட்சி குப்பைக் கிடங்கில் தீ: புகைமூட்டத்தால் மக்கள் அவதி

போக்குவரத்து அதிகாரி உத்தரவு மீறல்: தனியாா் பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

குப்பைக்கு மா்ம நபா்கள் தீ வைத்ததால் கரும்புகை எழுந்து பொதுமக்கள் அவதி
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



