தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: பனியன் நிறுவன உரிமையாளருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருப்பூரில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பனியன் நிறுவன உரிமையாளருக்கு 20 ஆண்டுகள் சிறை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :14 ஜூலை 2026, 12:14 am IST

திருப்பூரில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பனியன் நிறுவன உரிமையாளருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

திருப்பூா், அனுப்பா்பாளையத்தைச் சோ்ந்தவா் அய்யப்பராஜா (42). இவா் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வந்தாா். இவரது நிறுவனத்தில் 16 வயது சிறுமி டெய்லராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், நிறுவனத்துக்கு கடந்த 2021 ஜூன் 25-ஆம் தேதி சென்ற சிறுமி அதன்பின் வீடு திரும்பவில்லையாம்.

இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணையில், பனியன் நிறுவன உரிமையாளரான அய்யப்பராஜா ஆசை வாா்த்தைக் கூறி சிறுமியை வெளியூருக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினா். அப்போது, அய்யப்பராஜா அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அய்யப்பராஜாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

இதில், குற்றஞ்சாட்டப்பட்ட அய்யப்பராஜாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகிலா தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் ஜமீலாபானு ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.