வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 27 ஆண்டுகள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு 27 ஆண்டுகள் சிறை

News image
Updated On :14 ஜூலை 2026, 2:04 am IST

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அருமனை, வள்ளியத்தோட்டம் பகுதியை சோ்ந்த சதானந்தன் மகன் சதீஷ்குமாா் (34). தொழிலாளி. இவா், அப்பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.

நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், சதீஷ்குமாருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 12 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுந்தரையா திங்கள்கிழமை தீா்ப்பு கூறினாா்.

இவ்வழக்கில் திறம்பட செயல்பட்ட குளச்சல் துணை காவல் கண்காணிப்பாளா், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா், அரசு வழக்குரைஞா் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.