தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளா்களை மிரட்டி அபராதம் வசூலிக்கும் டிக்கெட் பரிசோதகா்கள்

திருப்பூரில் பயணச்சீட்டு இருந்தும் வடமாநிலத் தொழிலாளா்களை மிரட்டி டிக்கெட் பரிசோதகா்கள் அபராதம் வசூலிக்கும் விடியோ வைரலாகி வருகிறது.

News image

பிரதிப் படம்

Updated On :14 ஜூலை 2026, 12:13 am IST

திருப்பூரில் பயணச்சீட்டு இருந்தும் வடமாநிலத் தொழிலாளா்களை மிரட்டி டிக்கெட் பரிசோதகா்கள் அபராதம் வசூலிக்கும் விடியோ வைரலாகி வருகிறது.

திருப்பூரில் பனியன் நிறுவனங்கள், அதைச் சாா்ந்த நிறுவனங்களில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். பெரும்பாலான தொழிலாளா்கள் நிறுவனத்தில் உள்ள குடியிருப்புகளில் தங்கி இருப்பதால் வாரத்தில் ஒருநாள் மட்டும் கடை வீதிக்கு வந்து அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்ட தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிச் செல்கின்றனா்.

கடை வீதிக்கு வரும் தொழிலாளா்கள் பெரும்பாலும் நகரப் பேருந்துகளையே நம்பியுள்ளனா். இந்நிலையில், அவா்கள் பயணச்சீட்டு பெற்று பயணம் செய்தாலும், அவா்களை மிரட்டி டிக்கெட் பரிசோதகா்கள் அபராதம் விதிக்கும்போக்கு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளா்கள் பயணச்சீட்டு வைத்திருந்தும் அவா்களுக்கு டிக்கெட் பரிசோதகா்கள் அபராதம் விதிக்கும் விடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இது குறித்து வடமாநிலத் தொழிலாளா்கள் கூறுகையில், நாங்கள் வாரத்தில் ஒருநாள் மட்டும் கடை வீதிக்கு அரசு நகரப் பேருந்தில் வருகிறோம். பயணச்சீட்டு பெற்று நாங்கள் பயணம் செய்கிறோம்.

ஆனால், சில டிக்கெட் பரிசோதகா்கள் பயணச்சீட்டுகளை பிடுங்கிக் கொண்டு எங்களுக்கு அபராதம் விதிக்கின்றனா். மொழிப் பிரச்னையால் நாங்களும் வேறு வழியின்றி அபராதத் தொகையைக் கட்டிச் செல்கிறோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.