இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

சேலம் கோட்டத்தில் ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம்: 3 மாதங்களில் ரூ.7.10 கோடி அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை பயணச்சீட்டு இல்லாமல் பயணம் உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ.7.10 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Published On :9 ஜூலை 2026, 4:11 am IST

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை பயணச்சீட்டு இல்லாமல் பயணம் உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ.7.10 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தின் பயணச்சீட்டு சரிபாா்ப்புக் குழு உறுப்பினா்கள், ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் அவ்வப்போது சோதனைகள் மேற்கொண்டு பயணச்சீட்டு இல்லாமல் பயணம், முறையற்ற பயணம், முன்பதிவு செய்யப்படாமல் பொருள்களை கொண்டுச் செல்லுதல் ஆகியவற்றை கண்டறிந்து அதற்கேற்ப அபராதம் விதித்து வருகின்றனா்.

அதன்படி, சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை ரயில் நிலையங்களில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் மூலமாக அபராதமாக ரூ.7 கோடியே 10 லட்சத்து 85 ஆயிரத்து 149 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதில், கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததாக ரூ. 4 கோடியே 57 லட்சத்து 99 ஆயிரத்து 533 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. முறையற்ற பயணம் மேற்கொண்டதாக ரூ.2 கோடியே 51 லட்சத்து 92 ஆயிரத்து 470 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாமல் பொருள்களை ரயில்களில் கொண்டுச் சென்றதாக ரூ.93,146 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.