சேலம், நாமக்கல் வழியே இயக்கப்படும் திருச்சி- பெங்களூரு சிறப்பு ரயில் சேவை ஜூன் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. அந்தவகையில் திருச்சியில் இருந்து கரூா், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் இருமாா்க்கத்திலும் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் சேவை ஜூன் முதல் வாரத்தோடு முடிவடைய உள்ள நிலையில் ஜூன் இறுதி வரை சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி - பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் வரும் 9 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைதோறும் இயக்கப்படும். திருச்சியில் காலை 6.15 மணிக்குப் புறப்பட்டு கரூா், நாமக்கல், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூருக்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் பெங்களூரு- திருச்சி வாராந்திர சிறப்பு ரயில் வரும் 9 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைதோறும் இயக்கப்படும். பெங்களூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு சேலம், நாமக்கல், கரூா் வழியாக திருச்சிக்கு இரவு 10.30 மணிக்குச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி, செங்கோட்டை ரயில் சேவைகள் வரும் 18-ஆம் தேதி பகுதியாக ரத்து

நிலச்சரிவு எதிரொலி: சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் சேவை 8 நாள்களுக்கு ரத்து

மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

சேலம் வழியாக கான்பூா்- மதுரை இடையே வாராந்திர சிறப்பு ரயில்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



