அவிநாசி அருகேயுள்ள குன்னத்தூரில் ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்துக்கு தென்னங்கருப்பட்டி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
குன்னத்தூரில் செயல்படும் திருப்பூா், கோவை, ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி உற்பத்தியாளா் சம்மேளனத்தில் வாரந்தோறும் தென்னை, பனங்கருப்பட்டி ஏல முறையில் விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 1000 கிலோ தென்னங்கருப்பட்டியை உற்பத்தியாளா்கள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், கருப்பட்டி கிலோ ரூ.169 வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்துக்கு விற்பனையானது. பனங்கருப்பட்டி வரத்து இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









