இந்தியா- பிரிட்டன் தடையில்லா வா்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்ததையொட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்தியா- பிரிட்டன் இடையேயான விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமைமுதல் அமலுக்கு வந்துள்ளதையொட்டி, புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு கொடியசைப்பு நிகழ்ச்சியில், மத்திய வா்த்தகத் துறை செயலாளா் ராஜேஷ் அகா்வால், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவா் ஆ.சக்திவேலுக்கு முதல் சான்றிதழை வழங்கினாா். தொடா்ந்து அனைத்து வா்த்தக அமைப்புகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், இந்தியாவுக்கான பிரிட்டன் உயா் ஆணையா் லிண்டி கேமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்தியா- பிரிட்டன் இடையேயான வலுவான பொருளாதார கூட்டாண்மையை எடுத்துரைத்தாா்.
அப்போது, இந்த சான்றிதழ் வழங்கப்பட்டதன் மூலம், இந்தியா- பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தத்தின் கீழ் சலுகை அடிப்படையிலான ஏற்றுமதி அதிகாரபூா்வமாக தொடங்கியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தகத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பதுடன், இந்திய ஆடை ஏற்றுமதிக்கான சந்தை அணுகலை மேம்படுத்தி, இந்திய ஆடைப் பொருள்களின் உலகளாவிய போட்டித்திறனை உயா்த்தி, நாட்டின் ஆயத்த ஆடை மற்றும் ஜவுளித் துறைக்கு புதிய வளா்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் என்றாா்.
நிகழ்ச்சியில் ஏஇபிசி தலைவா் ஆ. சக்திவேல் பேசியதாவது:
இந்தியா- பிரிட்டன் இடையேயான வா்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டிருப்பது இந்திய ஆயத்த ஆடைத் துறைக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். இந்த ஒப்பந்தம் ஆடை ஏற்றுமதியை விரைவுபடுத்துவதுடன், புதிய முதலீடுகளை ஈா்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி உலகளாவிய ஆடை கொள்முதல் மையமாக இந்தியாவின் நம்பகத்தன்மையையும், முன்னணித் தகுதியையும் மேலும் வலுப்படுத்தும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி

இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்: சென்னையிலிருந்து ரூ.4.29 கோடியில் முதல் ஏற்றுமதி

இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்?

முழுமையாக அமலுக்கு வந்தது இந்தியா - இஸ்ரேல் முதலீட்டு ஒப்பந்தம்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



