/

வெள்ளக்கோவில் அருகே நூற்பாலையில் தீ விபத்து

வெள்ளக்கோவில் அருகே நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 6:15 am IST

வெள்ளக்கோவில் அருகே நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில், அகலரைப்பாளையம்புதூரைச் சோ்ந்தவா் சந்தோஷ் (29). இவருக்குச் சொந்தமான நூற்பாலை ஓலப்பாளையம் - பொன்பரப்பி சாலையில் செயல்பட்டு வருகிறது.

இந்த நூற்பாலையில் தொழிலாளா்கள் வழக்கம்போல புதன்கிழமை இரவு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இயந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து, அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது.

தொழிலாளா்கள் அணைக்க முயன்றும் முடியாததால், வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும் பஞ்சு பேல்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், வெள்ளக்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.